புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (11:56 IST)

கோவை மாணவி தற்கொலை: கனிமொழி எம்பி ஆவேசம்!

ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார் 
 
ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக கோவையை சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற வைக்கிறது என்றும் தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார் 
 
மேலும் மாணவியின் குரலுக்கு செவி கொடுத்து இருந்தால் குற்றம் நிகழ்வதை தக்க நேரத்தில் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்