வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (13:52 IST)

அரசு நூலகங்களில் வைக்கப்பட்ட கலைஞர் புத்தகம் – பின்னணியில் கனிமொழி !

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் கலைஞர் பற்றிய புத்தகமான ஒரு மனிதன் ஒரு இயக்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக அனுப்பப்பட்டுள்ளது.

தி இந்து குழுமத்தைச் சேர்ந்த 'ஃபிரண்ட் லைன்' இதழ் மறைந்த கலைஞரின் வாழ்நாள் சாதனைகள் குறித்து அவரது முதலாம் ஆண்டு நினைவுநாளான ஆகஸ்ட் 6 ஆம் நாள்  ‘ஒரு மனிதன், ஒரு இயக்கம்’ என்ற நூலை வெளியிட்டது. இந்த நூலை நூலகங்களில் வைக்கும் பொருட்டு தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி தனது அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.

நூலகங்களுக்கு யார் வேண்டுமானாலும் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்பதால் இந்த புத்தகங்களை நூலகங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதுபோல அனைத்து மாவட்டங்களிலும் இந்த நூலைக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.