கருத்து சொன்னதுக்கு கேஸா... சிக்கலில் ரஜினிகாந்த்?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சமபவம் குறித்து கருத்த தெரிவித்த ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதித்து அமைதி போராட்டம் நடத்திய மக்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்கி அதை கட்டுப்படுத்தப்போய் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து இந்த சம்பசம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு இந்த குழுவின் விசாரணை காலம் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விசாரணை குழு, தேவைப்பட்டால் நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அணுப்பி விசாரணை நடத்துவோம் என தெரிவித்துள்ளனர். அதாவது, துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிறகு ஆறுதல் சொல்ல சென்ற போது சென்னையில் செய்தியாளர்களிடம் ரஜினி, சமூக விரோதிகள் தூத்துக்குடியில் ஊடுருவி இருப்பதாக கூறினார்.
இந்த கருத்தின் அடிப்படையில் ரஜினிகாந்த விசாரிக்கப்படலாம் என தெரிகிறது.