தூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்யவே இந்த சோதனை: கனிமொழி

செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (23:07 IST)
பணப்பட்டுவாடா செய்வதாக வெளிவந்த புகாரை அடுத்து வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த சோதனை சற்றுமுன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த சோதனை குறித்து கனிமொழி கூறியபோது, 'சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக வேட்பாளர்கள் மீது கலங்கம் ஏற்படுத்தவே இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் வேலூரில் தேர்தலை ரத்து செய்தது போல் தூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்யவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்று கனிமொழி கூறினார்.
 
தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் 2 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றுள்ளதாகவும், கனிமொழியை ஆஜராகும்படி வருமான வரித்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

எல்லாம் காட்டு

பாமக உள்ள வரக்கூடாது!. ராகுல் வைத்த செக்!.. கடுப்பில் அன்புமணி ராமதாஸ்...

வாட்ஸ் அப் வழங்கிய புதிய வசதி.. இது ஆபத்தானது.. எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய அரசு...

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுங்கள்.. உங்கள் பணம் விரைவில் கிடைக்கும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

15 தவெக எம்.எல்.ஏக்களை ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ய வைக்க முயற்சி.. முறியடித்த உளவுத்துறை...

விஜய் மீது கோபத்தில் பாஜக தலைமை!.. லிஸ்ட் ரெடி!.. விரைவில் அமலாக்கத்துறை ரெய்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments