வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (21:24 IST)

கனிமொழி வீட்டில் திடீர் சோதனைக்கு ஸ்டாலின் கண்டனம்

திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் கனிமொழி. இந்நிலையில் தற்போது அவர் தங்கியுள்ள வீடு, அலுவலகம் போன்றவற்றில் 10 பேர் கொண்ட  வருமான வரித்துறை அதிகாரிகள் கதவை மூடிவிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். அதனால் யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
கனிமொழி தங்கியுள்ள இல்லத்துக்கு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் சோத நடைபெறும் இடத்துக்குச் சென்றுள்ளார்.
 
மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
 
இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.