செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (12:48 IST)

காடுவெட்டி குருவின் மகன் திடீர் கைது! – அரியலூரில் பரபரப்பு!

மறைந்த பாமக பிரபலம் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தூண்களில் ஒருவராக கருதப்பட்ட காடுவெட்டி குரு சில வருடங்கள் முன்னதாக மறைந்த நிலையில் அவரது மகன் கனலரசன் சமீபத்தில் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை தொடங்கினார்.

இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் கொடியேற்றும் விழா நடைபெற்றுள்ளது. அதற்காக கனலரசன் சென்ற நிலையில் கொரோனா பொதுமுடக்க விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக கனலரசன் மற்றும் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கனலரசன் உதயநிதி சந்திப்பு அண்மையில் நிகழ்ந்த நிலையில் இந்த கைது சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.