புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (08:23 IST)

ஸ்டாலினை சந்தித்த கமல் கட்சியின் முன்னாள் பொறுப்பாளர்!

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய கமீலா நாசர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த போது அவரது சினிமா உலகின் நெருங்கிய நட்பில் இருந்தவர்களுக்கு எல்லாம் கட்சியின் உயர்நிலைப் பதவி அளிக்கப்பட்டது. அந்த வகையில் கமலின் நண்பர் நாசரின் மனைவி கமீலா நாசருக்கு மாநிலச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. தேர்தலில் அவர் விரும்பிய தொகுதியில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் அவர் வெளியேறியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது கமீலா நாசர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்று சந்தித்துள்ளார். வெற்றி பெற்றதற்கு வாழ்த்து சொல்வதற்காக நடந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்படுகிறது.