வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 4 மே 2021 (08:03 IST)

தேன் போல இனித்திடும் வாக்குறுதி: ஸ்டாலின் பதிலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்

முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதி தமிழர்களுக்கு தேன்போல் இனித்திடும் வாக்குறுதி என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  அவர்கள் சமீபத்தில் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் அவர் கூறியிருந்ததாவது: சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
 
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இந்த வாழ்த்துக்கு ஸ்டாலின் அவர்கள் பதில் டுவிட் செய்திருந்தார் அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.  தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்.
 
இந்த நிலையில் ஸ்டாலினின் இந்த ட்விட்டருக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘கோவிட் பெருந்தொற்றால் அல்லல்படும் தமிழர்களுக்கு இது, தேன் போல இனித்திடும் வாக்குறுதி. இந்த வாக்குறுதி பலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! என்று கூறியுள்ளார்.