1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 3 மே 2021 (20:38 IST)

கமல்ஹாசன் தோலிவ் குறித்து ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் சரத்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது 

 
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் முன்னிலை வகித்தாலும் கடைசியில் அவர் ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஸ்ரீனிவாசன் தோல்வி அடைந்தார் 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தோல்வி அடைந்தது குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் தோல்வி குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் 
கமல்ஹாசன் டார்ச் லைட்டை பிடித்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவு செய்து எனது அப்பா எப்போதுமே எனக்கு பெருமை ஆனவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது