என் உரையிலும் நடையிலும் கலந்தவர்! – புத்தக திருவிழாவில் பேசும் கமல்!

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 5 மார்ச் 2021 (12:03 IST)
சென்னையில் புத்தக திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று கமல்ஹாசன் பேச உள்ளதாக அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் புத்தக திருவிழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மார்ச் 9 வரை நடைபெறும் இந்த புத்தக விழாவில் 500க்கும் மேற்பட்ட ஸ்டால்களும், 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களும் உள்ளன. இந்நிலையில் புத்தக திருவிழா தொடங்கிய நாள் முதலாக நாள் ஒன்றுக்கு ஒரு புத்தகம் என மநீம தலைவர் கமல்ஹாசன் பேஸ்புக் லைவில் அறிமுகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று புத்தகவிழாவில் “என் உரையிலும் நடையிலும் கலந்தவர்” என்ற தலைப்பில் புத்தகவிழா அரங்கில் பேசவுள்ள கமல்ஹாசன் இன்று மாலை 5 மணிக்கு வாய்ப்புள்ளவர்கள் வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :