பிரசாத் கிஷோரே எங்ககிட்டதான் காப்பி அடிக்கிறார்! – கமல்ஹாசன் விமர்சனம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் போட்டியிடும் கமல்ஹாசன் மநீம வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியிடும் நிலையில் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீப்ரியாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் கமல்ஹாசன் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் “கோவை தெற்கு தொகுதியில் பாஜக வெற்றி பெறும் நிலைமை தெரிந்தது. அந்த ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி வெற்றிபெற கூடாது என்பதால்தான் நானே நேரடியாக கோவை தெற்கில் போட்டியிடுகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் திமுக ஆலோசகரான பிரசாத் கிஷோர் பற்றி பேசிய அவர் “ஆரம்பத்தில் பிரசாத் கிஷோரை மய்யத்தின் தேர்தல் ஆலோசகராக நியமிக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நாங்கள் வைத்த தேர்வில் அவர் பாஸ் ஆகவில்லை. ஆனால் தற்போது எங்கள் திட்டங்களை காப்பியடித்து திமுகவிற்கு உதவி வருகிறார்” என விமர்சித்துள்ளார்.