புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (13:54 IST)

நான் சொன்னதுபோல நடக்கிறது ! திமுக, காங்கிரஸ் மோதல் குறித்து கமல் !!

திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசும் பேச்சுகள் அவ்விரு கட்சிகளுக்கும் சுமுகமான உறவு இல்லை என்பதைக் காட்டுகிறது. திமுக முன்னணித் தலைவர் துரைமுருகன் கூட இந்த பிரச்சனை பற்றி கருத்து அது பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் திமுக காங்கிரஸ் மோதல் குறித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலிடம் இன்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல், ‘நான் ஏற்கனவே சொல்லியது போல இரு கட்சிகளுக்கும் இடையில் விரிசல் எழுந்துள்ளது.’ எனப் பதிலளித்தார்.

நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என நினைத்திருந்ததாகவும் ஒரு பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.