1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (13:02 IST)

அதிமுக பிரமுகர் படுகொலை; கோவில்பட்டியில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் ஒரு அருவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த பாலமுருகன், கோவில்பட்டி 5 ஆவது வார்டு அதிமுக பிரதிநிதியாக இருந்தார். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு மோட்டார் பைக்கில் தனது வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தபோது அவரை மறித்த மர்ம நபர்கள் சிலர், கரும்பை கொண்டு தாக்கியுள்ளனர்.

இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த பாலமுருகனை, இடுப்பு மற்றும் கழுத்து பகுதிகளில் அரிவாள் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலமுருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கக்கூடுமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.