திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2020 (06:38 IST)

யாருடைய கட்டளைக்காக காத்திருக்கின்றீர்கள்: முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி

யாருடைய கட்டளைக்காக காத்திருக்கின்றீர்கள்
மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள் நிலையில் ஒருசில மாநிலங்கள் தன்னிச்சையாக ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளன. ஆனால் தமிழகம் மட்டுமே மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
அண்டை மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கும்போது என் முதல்வர் யாருடைய கட்டளைக்காகவோ காத்திருக்கின்றார். என்னுடைய குரல் மக்கள் சார்பான குரல். உடனே உங்கள் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி ஊரடங்கை நீடித்து உத்தரவிடுங்கள்
 
அண்டை மாநிலங்கள் சில கொரோனா வைரஸ் உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். இது கமிஷன் மற்றும் ஒமிஷன் பெரும் நேரம் அல்ல. மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
 
இதே கமல்ஹாசன் தான் கடந்த சில நாட்களுக்கு முன் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தபோது முன்னறிவிப்பு இல்லாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் பதிவு செய்த டுவிட்டில் கூறியபோது, ‘உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.  பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.