வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (17:35 IST)

திருவண்ணாமலையில் தெருநாய்களுக்கு சொறிநோய்! மனிதர்களுக்குப் பரவுமா?

திருவண்ணாமலையில் சுற்றித்திரியும் 100 கணக்கான தெரு நாய்களுக்கு சொறி போன்ற நோய் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் தெரு நாய்களுக்கு உணவுக் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. ஆனால் அதைவிடப் பெரிய விஷயமாக அவைகளுக்கு இப்போது சொறி சிரங்கு போன்ற நோய்கள் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு இந்த நோய்கள் ஏற்பட்டு தோல்கள் உரிந்து அருவருப்பான நிலையில் அவை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் மருத்துவர்களைக் கொண்டு அந்நாய்களை மேற்பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.