தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு தகவல்: சென்னை, கோவையில் அதிக பாதிப்பு
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவுக்கு 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மொத்தம் தமிழகத்தில் 1075 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 199 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையை அடுத்து கோவையில் 119 பேர்கலூக்கும், ஈரோட்டில் 64 பேர்களுக்கும் திருப்பூரில் 60 பேர்களுக்கும், திண்டுக்கல் மற்றும் நெல்லையில் 56 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாமக்கல்லில் 45 பேர்களுக்கும், செங்கல்பட்டில் 43 பேர்களுக்கும், திருச்சியில் 43 பேர்களுக்கும், தேனியில் 41 பேர்களுக்கும், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மிகக்குறைவாக அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவர் மட்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேர்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது