புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (14:44 IST)

கமல் பங்கேற்ற கூட்டத்திற்கு திடீர் தடை விதித்த பறக்கும்படை!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளார். அதில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கோவையில் மாலை ஆறு மணிக்கு நடைபெறும் கட்சிக்கூட்டம் ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது
 
இந்த நிலையில் அதற்கு முன்னரே கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கமலஹாசன் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கமல்ஹாசனும் மருத்துவர்களும் இணைந்து  கலந்துரையாடும் இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், அனுமதியின்றி நடைபெறும் இந்த கூட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்ததனர். இதனையடுத்து இந்த கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது
 
இருப்பினும் மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி வேட்பாளர் அறிவிப்பு மற்றும் அறிமுக கூட்டம் நடைபெறும் என கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டம் ஒன்று பாதியில் திடீரென நிறுத்தப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது