1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By c.anandakumar
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (20:52 IST)

கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிரடி ! ரூ 3 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல்

கரூர் மாவட்டம் குளித்தலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன்  தலைமையிலான நிலையாக நின்று சோதனை செய்யும் குழுவினர் குளித்தலை அருகே சிவாயம் பிரிவு ரோடு பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ராமநாதபுரத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற வேனில் சோதனையிட்டனர்.
அப்போது வாளவந்தியை சேர்ந்த டிரைவர் குமார் என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த  ரூ.3,35,000 பறிமுதல்  பறிமுதல் செய்யப்பட்ட பணம் குளித்தலை சட்டமன்றத்தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.எம்.லியாத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.