செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (18:13 IST)

வாழ்ந்தேன், வரி செலுத்தினேன், நல்லவனாக இருந்தேன் என்பது மட்டும் போதாது: அஜித்தை சீண்டும் கமல்?

உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தொடங்கி தற்போது தேர்தலை சந்திப்பதற்காக விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார் 
 
ஏற்கனவே தென் மாவட்டங்களில் ஒரு சுற்று பிரசாரத்தை முடித்து விட்ட கமல்ஹாசன் தற்போது சென்னை உள்பட வட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது ’பணம் படைத்தவர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை என்றும் ஆனால் ஏழையாக ஒருவர் அரசியலுக்கு வந்து பணக்காரராகி மக்களை ஏழை ஆக்குவதே தவறு’ என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பேச்சில் அவர் கருணாநிதியை தான் மறைமுகமாக குறிப்பிட்டதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்
 
அதேபோல் ’வாழ்ந்தேன், வரி செலுத்தினேன், நல்லவனாக இருந்தேன் என்பது மட்டும் போதாது. மக்களுக்காக என்ன செய்தேன் என்பதே முக்கியம் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார். இது அஜித்தை மறைமுகமாக குற்றச்சாட்டுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்
 
கருணாநிதி உள்பட திமுகவினர் மீது கமல் குற்றச்சாடு வைப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அஜித்தை ஏன் இவர் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார் என்று அஜித் ரசிகர்கள் வரிந்துகட்டிக்கொண்டு தற்போது சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது