திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (19:19 IST)

பக்ரீத் திருநாளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

நாளை இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாட இருப்பதை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக வாழ்த்துச் செய்தி ஒன்றை தெரிவித்திருந்தார் என்பதும் அதேபோல் அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் அவர்களும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து டுவிட்டில் கூறியிருப்பதாவது: 
 
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈகையும் தியாகமும் பெருகட்டும். அளவற்ற அன்பு பரவட்டும்.