மலேசிய அமைச்சருடன் கமல்ஹாசன் பேச்சு: இந்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை!
மலேசிய அமைச்சருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்திய அரசுக்கு அவர் ஒரு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று மலேசியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக மலேசியாவில் வாழும் இந்தியர்கள் கொரோனா காரணமாக விமானங்கள் இயங்காததால் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமலஹாசன் மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களுடன் உரையாடி உள்ளார்
இந்த உரையாடலின் போது கொரோனா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களும் பற்றி பேசியதாகவும் மலேசியாவில் இருந்து இந்தியா திரும்ப விரும்புபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அதிகரிக்க இந்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மலேசியாவில் வாழும் தமிழர்கள் கொரானா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி மலேசியாவின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுடன் உரையாடினேன். தாயகம் திரும்ப விரும்புபவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அதிகரிக்க இந்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்.