புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (15:47 IST)

தீபாவளி அன்று சன் தொலைக்காட்சியில் வெளியாகும் டாக்டர் திரைப்படம்!

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தீபாவளி அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

இது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்போது கே ஜே ஆர் ராஜேஷ் மறுத்துள்ளாராம். விரைவில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளாராம். இந்நிலையில் இன்னும் ரிலீஸ் தேதியே முடிவாகாத நிலையில் தீபாவளி அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாக சொல்லப்படுகிறது.