புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (22:40 IST)

புதிய கல்விக்கொள்கையில் தம்பி சூர்யாவுக்கு ஆதரவு உண்டு: கமல்ஹாசன்

நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து பேசிய விவகாரம் கடந்த 2 நாட்களாக தமிழ் திரையுலகிலும், தமிழக அரசியல் உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தப் பிரச்சனையை சூர்யாவே அதற்கு பிறகு பேசவேயில்லை. இந்த நிலையில் அவரை சுற்றி உள்ள மற்றவர்கள் அவர் பேசிய  கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்து, இந்த பிரச்சனையை முடியவிடாமல் நீடிக்க வைக்கும் முயற்சியை கொண்டிக்கின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் சற்று முன்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றை எனக்கும் உடன்பாடு உண்டு.
 
மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு. இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்