1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:02 IST)

இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு - கமல் ஆதங்க ட்வீட்

நீட் நுழைவு தேர்வு தற்கொலை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 
மத்திய அரசின் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடந்து முடிந்தது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு முதல்நாள் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க. இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!