வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (22:37 IST)

வெற்றியோடு திரும்பி வா: கமல்ஹாசனை வாழ்த்திய உறவினர்!

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் முதலாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ள கமல்ஹாசனுக்கு அவருடைய உறவினர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் 
 
இது ஒரு வீடியோவை கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன், சாருஹாசனின் மகள் சுகாசினி உள்பட கமல்ஹாசனின் உறவினர்கள் இன்று அவருடைய வீட்டுக்கு வந்து கமல்ஹாசனுக்கு ஆசி தெரிவித்தனர் 
 
வெற்றியோடு திரும்பி வா உன்னுடைய அப்பா வழியில் நீ செல்கிறாய், கண்டிப்பாக உனக்கு வெற்றி கிடைக்கும் என்று அவர்கள் ஆசீர்வாதம் செய்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன இந்த வீடியோ கமல்ஹாசனின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது