1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (19:40 IST)

அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கமல் மற்றும் சீமான்

kamal seeman
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் விமர்சித்திருந்த நிலையில், தற்போது அண்ணாமலைக்கு  சீமான், கமல் இருவரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அமெரிக்கா நாடு சென்றார். அங்கு   நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர்,  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை விமர்சித்தார்.

இதற்கு நடிகர் கமல்ஹாசன்’’ ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக்கடிக்க முனையும் அண்ணாமலைக்கு கண்டனம்’’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்தார்.


இந்த நிலையில், சமீபத்தில், பேட்டியளித்த அண்ணாமலை, ஒரு நல்ல அரசியல் தலைவர் என்பவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுவார். ஆனால், சீமான், எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்…அவர்  நல்ல அரசியல் தலைவர் கிடையாது என்று கூறியதை குறிப்பிட்டு இன்று ஒரு செய்தியாளர் சீமானிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சீமான் தனக்கு ‘’தெரியாது என்று’’ அண்ணாமலை கூறியதையே  கூறவே, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Edited by Sinoj