என் இனிய நண்பரை இழந்து விட்டேன் - நடிகர் கமல் டுவீட்
பிரபல வில்லுப்பாட்டு விசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் காலமானார். அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் டுவீட் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1928ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம் சிறுவயது முதலே வில்லுப்பாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்
சுப்பு ஆறுமுகம் பல திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பாக கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் நாகேஷ் உள்பட பல்வேறு நகைச்சுவை கலைஞர்களுக்கு அவர் நகைச்சுவை பகுதிகளை எழுதியவர் ஆவார்.
கடந்த 40 ஆண்டுகளாக பல இடங்களில் வில்லுபட்டு கச்சேரியை நடத்திய அவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்ற அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர் அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி எனத் தெரிவித்துள்ளார்.
Edited by Sinoj