கமல்-கருணாஸ் திடீர் சந்திப்பு: தீவிர ஆலோசனை
கமல்-கருணாஸ் திடீர் சந்திப்பு: தீவிர ஆலோசனை
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகிய இருவரும் தனியாக சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை செய்ததாக வெளி வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசும் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று மாலை சந்தித்து பேசியுள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்த எதிர்காலம் மற்றும் அவரது திரைப்படங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், கமல்ஹாசனின் கட்சி கடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு தான் மிகவும் வருந்துவதாகவும் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்க வேண்டியவர் என்றும் தெரிவித்தார்
மேலும் கமல் மற்றும் சீமான் ஆகிய இருவரும் இணைந்தால் மாபெரும் சக்தியாக தமிழகத்தில் உருவாகலாம் என்றும் அடுத்த தேர்தலிலாவது அது நடக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாஸ், சசிகலா முதலில் அரசியலுக்கு வரட்டும் அதன் பின்னர் பார்க்கலாம் என்று பதிலளித்தார். கமல் மற்றும் கருணாஸின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.