1000 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜக வளரமுடியாது: கி வீரமணி
1000 ஆண்டுகள் ஆனாலும் பாஜக தமிழகத்தில் வளர முடியாது என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார்
மயிலாடுதுறை அருகே உள்ள திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் வீரமணி பேசியபோது பகுத்தறிவு என்பதே விஞ்ஞானம் என்றும் சில அரைவேக்காடுகள் திராவிட ஆட்சியை கவிழ்த்து விடுவதாக கூறுகிறார்கள் என்றும் அரசியல் சட்டம் ஜாதி ஒழிப்புக்கு எதிராக உள்ளதாக பெரியார் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் கூறினார்
நம்மில் பலரது மகன்கள் பட்டதாரிகளும் டாக்டர்களாகவும் அறிஞர்களாகவும் பெரியார் இல்லாவிட்டால் இருந்திருக்க முடியாது என்றும் சமஸ்கிருதம் படித்தவர்கள்தான் டாக்டர்களாகவும் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் ஆயிரம் ஆண்டுகளானாலும் தமிழகத்தில் பாஜக வளர முடியாது என்றும் திராவிட இயக்கங்கள் தான் தன்மானத்தோடு தமிழகத்தை வாழ வைக்கும் என்றும் அவர் கூறினார்