வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (13:30 IST)

நீ கிறிஸ்த்தவன்.. அதான் இப்படி கேள்வி கேக்குற..! – பாஜக பிரமுகர் பேச்சால் சர்ச்சை!

Durai Senathipathi
காரைக்காலில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் பத்திரிக்கையாளர் கேள்விக்கு மதத்தை குறிப்பிட்டு பேசிய பாஜக பிரமுகரால் சலசலப்பு எழுந்துள்ளது.

காரைக்காலில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையிலான பத்திரிக்கை சந்திப்பு நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்ட பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டபோது காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் துரை.சேனாதிபதி நிருபரை பார்த்து “நீ ஒரு கிறிஸ்ட்டியன்.. அதனால்தான் இப்படி கேள்வி கேட்கிறாய்” என ஆவேசமாக பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பத்திரிக்கையாளரை மதத்தை குறிப்பிட்டும், ஒருமையிலும் பேசிய துரை.சேனாதிபதி மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.