திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (10:34 IST)

மாணவர்களுக்கு 11 நிபந்தனைகள் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு !

பள்ளி விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கு புதிதாக நிபந்தனைகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை கடந்த சில ஆண்டுகளாக சில அதிரடியான  அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பள்ளி வகுப்புகளில் பயோ மெட்ரிக், ஸ்மார்ட் வகுப்புகள், புதிய சீருடை எனப் பல மாற்றங்களை செய்து வருகிறது. அது போல தேர்வு முடிவுகள் வெளியிடுவதிலும்  சில மாற்றங்களை அதிரடியாக செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

1.காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.
2.பைக்., செல்போன், ஸ்மார்ட்போன் பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
3.லோ ஹிப் , டைட் பேண்ட் அணிந்து வரக்கூடாது.
4.அரைக்ககை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும் அது இறுக்கமாக, குட்டையாக இருக்கக்கூடாது.
5.தலைமுடி சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும் போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.
6.கருப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி.
7.டக் இன் செய்யும் போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக் இன் செய்யக்கூடாது.
8.மேலுதட்டை தாண்டி முறுக்கு மீசை தாடி வைக்க கூடாது.
 9.கைகளில் வளையம் கயிறு செயின் அணியக்கூடாது.
10.பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்.
11.விடுமுறை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியர் அனுமதி கையெழுத்து பெற்ற பின் மட்டுமே எடுக்க வேண்டும். என்ற 11 கட்டளைகள் பிறப்பித்து அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது...!