18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு

வியாழன், 25 அக்டோபர் 2018 (10:38 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

 
தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணனுக்கு சென்றது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
அதன்படி இன்று காலை 10.15 மணிக்கு சத்தியநாராயண் தீர்ப்பை வாசிக்க நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக 10.30 மணிக்கு அவர் தீர்ப்பை வாசிக்க தொடங்கினர்.
 
தீர்ப்பை வாசித்த அவர், சபாநாயகரின் முடிவில் தவறு இல்லை மற்றும் தகுதி நீக்கம் சட்டவிரோதமானது அல்ல எனக்கூறிய அவர், 18 எம்.ஏல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். மேலும், 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும், எம்.எல்.ஏக்களாக தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

விஜயை நேரில் சந்தித்து 6 கோரிக்கைகள் வைத்த கமல்!.. முக்கிய அப்டேட்...

சிறுமியின் பேச்சைக்கேட்ட முதல்வர் விஜய்!.. உடனே மாத்திட்டாரு!...

மூனெழுத்து இட்லி நடிகைதான் எல்லாத்துக்கும் காரணம்!.. ரவி மோகன் கண்ணீர்..

யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி?.. எப்போது வெளியாகும் பட்டியல்?.. பரபர அப்டேட்..

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments