1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (14:28 IST)

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழையத்தடை: அறிவிப்பை வைக்க நீதிபதி உத்தரவு

Palani
பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த அறிவிப்பு பலகையை வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பழனி முருகன் கோவிலில் சமீபத்தில் இந்துக்கள் அல்லாதவர் செல்ல முயன்ற போது தடுக்கப்பட்டனர். ஏற்கனவே இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை இருந்த நிலையில் மராமத்து பணி காரணமாக அந்த அறிவிப்பு பலகை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு  நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இந்துக்கள் அல்லாதவர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை அகற்றியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி உடனடியாக பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை வைக்க உத்தரவிட்டார். 
 
மேலும் பழனி முருகன் கோவிலில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
Edited by Mahendran