வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (17:50 IST)

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசின் அரசாணை வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்
 
அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் சற்று முன்னர் இது குறித்த அரசாணை அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்கள் வரை நகை வாங்கிய 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது