1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (12:22 IST)

400 சீட்டுகளுக்கு மேல், பாஜக வெற்றி பெற ஓபிஎஸ்-க்கு வாக்களிக்க வேண்டும்: ஜே.பி.நட்டா

400 சீட்டுகளுக்கு மேல், பாஜக வெற்றி பெற ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம் செய்தார். 
 
ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஜே.பி.நட்டா இன்று வாக்கு சேகரித்த நிலையில் அவர் பேசியதாவது: 
 
ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த தலைவர், தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர். மிகச்சிறந்த தலைவரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பதில் நான் பெருமை அடைகிறேன். தமிழகத்திற்கு 4 மடங்கு அதிகமாக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. பல்வேறு வகைகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதிகளை வழங்கியுள்ளது என்று கூறினார்.
 
பரமக்குடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாடு அங்கு நடந்த பிரமாண்டமான வாகனப் பேரணியிலும் கலந்து கொண்டார்.
 
பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பரப்புரை செய்த ஜேபி நட்டா, பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து, காந்தி சிலை வரை நடந்த ரோடு ஷோவில் கலந்து கொண்டார்.
 
Edited by Mahendran