வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (07:24 IST)

நாளையுடன் முடிவடைகிறது தேர்தல் பிரச்சாரம்.. என்ன செய்ய காத்திருக்கிறார்கள் வாக்காளர்கள்?

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 15ஆம் தேதி மாலை அதாவது நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் அனல் பரந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சி தலைவர்கள் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையுள்ள நிலையில் இன்றும் நாளையும் ஓய்வே இல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒரு பக்கம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வருகின்றனர். 
 
கடும் கோடை வெயிலிலும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவு வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் கோடை காலம் என்பதால் 5 மணியுடன் நிறைவு பெறும் பரப்புரை ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே 6 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
Edited by Siva