செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (08:07 IST)

குருவும் இல்லை, சிஷ்யனும் இல்லை.. டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரம்..!

தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் குரு என்றும் அதே தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வனை சிஷ்யன் என்றும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அதெல்லாம் ஒன்றும் இல்லை என அனுராதா தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார்.

அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் வெளியே வந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தபோது அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவர்தான் தங்க தமிழ்ச்செல்வன். இருவரும் குரு சிஷ்யன் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்ட நிலையில் இன்று இருவரும் ஒரே தொகுதியில் எதிரில் துருவங்களில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இதுவரை டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய நிலையில் ’டிடிவி தினகரன் தங்கதமிழ்செல்வனையும் குரு சிஷ்யன் என்று யார் சொன்னது? அது மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை, மக்களிடமும் அந்த மாதிரி எண்ணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்

தேர்தல் வரலாற்றில் அதிக வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும், குக்கர் சின்னத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது என்றும், இந்த சின்னம் அனைத்து மக்களிடமும் ரீச் ஆகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

செல்லும் இடமெல்லாம் நீங்கள் தான் ஜெயிக்க வேண்டும் என்று மக்கள் டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்றும் கண்டிப்பாக இந்த தொகுதியில் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் அனுராதா தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

Edited by Siva