1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (14:01 IST)

வருமான வரித்துறை ரெய்டு எதிரொலி: ஜாஸ் சினிமாஸ் காட்சிகள் ரத்து

இன்று காலை முதல் ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர்களின் சோதனை நடப்பதால் தமிழகமே பரபரப்பில் உள்ளது.



 
 
சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் ஆலை, ஜாஸ் சினிமாஸ் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் திரையரங்குகளில் இன்றைய மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வருமான வரித்துறையினர்களின் சோதனை காரணமாகவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மாலை மற்றும் இரவு காட்சிகள் குறித்த அறிவிப்பு இனிமேல் அறிவிக்கப்படும் என தெரிகிறது. ஜாஸ் சினிமாவை டாக்டர் சிவகுமார் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.