1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜூன் 2018 (11:00 IST)

ரொனால்டோ-மெஸ்ஸி இடையேதான் போட்டி: கமலுக்கு ஜெயகுமார் பதிலடி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது கட்சியின் அதிகாரபூர்வ பாடலை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் 50 ஆண்டுகாலமாக தமிழகத்தில் தவறுகள் நடந்து வருவதாகவும், நாம் நிச்சயம் இம்முறை ஆட்சியை பிடிப்போம் என்றும் பேசினார்.
 
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கமல் கூறியது குறித்து கருத்து கூறிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், 'உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோ-மெஸ்ஸி இடையேதான் போட்டி என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்றும் மற்ற அரசியல் கட்சியினர் தங்களுக்கு போட்டியே இல்லை என்றும் மறைமுகமாக கூறியுள்ளார்.
 
கமல்ஹாசனை அமைச்சர் ஜெயகுமார் அடிக்கடி விமர்சனம் செய்து வருவதும் அதற்கு கமல்ஹாசன் பதிலடி தந்து கொண்டிருப்பதும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமைச்சரின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்