1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (19:53 IST)

ரஜினியை சந்திக்க 144 தடை உத்தரவா? ஜெயகுமார் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக இஸ்லாமிய தலைவர்களையும் மத குருமார்களையும் சந்தித்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினியை இஸ்லாமிய தலைவர்கள் சந்தித்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய பேட்டியில் சில கருத்துக்களை கூறியுள்ளார் 
 
இது குறித்து செய்தியாளர்கள் ரஜினிகாந்த், இஸ்லாமிய தலைவர்களை சந்திப்பது குறித்து கேட்ட கேள்விக்கு ’யார் வேண்டுமானாலும் ரஜினியை சந்திக்கலாம் அவரை யாரும் சந்திக்க கூடாது என 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார் 
 
மேலும் ரஜினி ஒரு சிறந்த நடிகர் அதுமட்டுமன்றி தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருக்கும் அவர் தமிழகத்தை பற்றி நன்கு அறிந்தவர் என்றும், தமிழக பிரச்சனைகள் குறித்தும் அவருக்கு தெரியும் என்றும், எனவே அவரை சந்தித்து பேசுவதில் எந்த வித தவறும் இல்லை என்று கூறியுள்ளார் ஜெயக்குமாரின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது