எங்களை விட்டு விலகினால் நஷ்டம் தான்: கூட்டணி கட்சிகளுக்கு ஜெயகுமார் அறிவுரை!
எங்களோடு இருந்தால் தான் கூட்டணி கட்சிகளுக்கு லாபம் கிடைக்கும் என்றும் எங்களை விட்டு விலகி சென்றால் கூட்டணி கட்சிகளுக்கு நஷ்டம்தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் கூட்டணி கட்சிகளை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூட்டணியை பொருத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் எங்களுடன் கூட்டணி ஆக இருந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்றும் எங்களை விட்டு விலகிச் சென்றால் அந்தக் கட்சிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த கருத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.