மன்னிப்பு விவகாரம்: ஓபிஎஸ் கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்!

திங்கள், 20 டிசம்பர் 2021 (15:00 IST)
மன்னிப்பு கேட்டால் யாரையும் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம் என ஓபிஎஸ் கூறிய குட்டிகதைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் ஒரு கதை மூலம் தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வதே நல்ல தலைமைக்கு அழகு என கூறியிருந்தார் 
 
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறிய இந்த கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் கூறிய குட்டி கதை சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் சசிகலா இல்லாமல் அதிமுக தற்போது நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதிலிருந்தும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ் தயாராக இருப்பதாகவும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
 
 

எல்லாம் காட்டு

டாஸ்மாக் தனியார் மயம் ஆகுமா?.. மதுவிலக்குத்துறை அமைச்சர் சொல்வது என்ன?..

வளைகுடா நாட்டு தனித்தேர்வர்களுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியாத மம்தா பானர்ஜி.. உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்

ஒரு பெரிய தலைவரை மிஸ் பண்ணிட்டோம்!.. பெரிய கனவு இருந்தது!.. லதா ரஜினிகாந்த் பேட்டி..

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

அடுத்த கட்டுரையில்
Show comments