செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (13:42 IST)

அதிமுகவில் உள்ள மாற்றங்கள் ஓபிஎஸ் - ஈபிஎஸ்-க்கு ஆப்பா? ஜெயகுமார் பேட்டி!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறித்து ஜெயகுமார் பேட்டி. 

 
இதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இனிமேல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிமுக அமைப்பு விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனிடையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அதிமுகவில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதியால் எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ தனியாக தலைமை பதவியை கைப்பற்ற முடியாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒரே வாக்கு மூலமே தேர்தெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் பொதுச்செயலாளர் என்ற பதவி இல்லை என்பதும் அதற்கு பதிலாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகள் ஏற்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.