புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (15:34 IST)

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என்று யார் சொன்னது? என்று செய்தி அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார் 
 
அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறார் என்றும் அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பார் என்றும் ஜெயக்குமார் கூறினார்
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் அவர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது