புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (19:24 IST)

கைது செய்ய மூன்று தனிப்படைகள்: தலைமறைவானாரா ராஜேந்திரபாலாஜி?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி புகார் சுமத்தப்பட்ட நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் தான் கைது செய்யப்படலாம் என்பதை அடுத்து முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்
 
ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தமிழக காவல்துறை 3 தனிப்படை அமைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி விட்டதாகவும் அவரை தேடும் பணியில் தனிப்படை குழுவினர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது