திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (20:38 IST)

மலேசியாவில் அறிமுகமாகும் ஜல்லிக்கட்டு

தமிழா்களின் வீர விளையாட்டில் ஒன்றான ஜல்லிக்கட்ட போட்டி முதல்முறையாக மலேசியாவில் நடத்தப்பட உள்ளது.

 
தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு தமிழா் பண்டிகையான பொங்கள் பண்டிகையின் போது நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படமால் இருந்த ஜல்லிக்கட்டு மெரினாவில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்றது.
 
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகத்தில் நடந்த போரட்டம் இந்தியா மட்டுமின்றி அந்நிய நாடுகளிலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி முதல் முறையாக மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
வரும் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் மலேசியாவைச் சோ்ந்த 20 காலைகள் பங்குபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சோ்ந்த 15 மாவட்ட மாடுபிடி வீரா்கள் மலேசியா செல்லவுள்ளனர்.