1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (19:40 IST)

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கலைவிழா

அடுத்த வருடம் நட்சத்திரக் கலைவிழாவை நடத்துகிறது தென்னிந்திய நடிகர் சங்கம்.





தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவ்வப்போது கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது வழக்கம். அப்படி திரட்டப்படும் நிதி, நடிகர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும். அந்த வகையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காகக் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி இந்தக் கலைவிழா நடக்க இருக்கிறது. கோலாலம்பூரில் உள்ள புக்கிஜாலி அரங்கில் நடைபெற இருக்கும் நட்சத்திரக் கலைவிழாவிற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இதற்கான டிக்கெட் விற்பனையை, மலேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ சரவணன் தொடங்கி வைத்தார். புக்கிஜாலி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.