பன்னீர்செல்வத்தை பாராட்டிய பன்னீர்செல்வம்: திமுக எதிர்ப்பு!
தமிழக சட்டசபையில் கலசபாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்து பேசினார். இதற்கு திமுகவின் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது, கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டி பேசினார்.
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என குறிப்பிட்டார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரத்தின் போது யாரையும் பாராட்டி பேசக்கூடாது, அது சபை விதிமுறையல்ல என கூறினார்.
உடனே எழுந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்லா பாராட்டுக்கும் உரியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே, என்னை யாரும் பாராட்டி பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.