1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (16:00 IST)

ஒரே மொழி இருக்க வாய்ப்பே இல்லை.. ஹிந்தியை எதிர்க்கும் ஜக்கி வாசு தேவ்

ஹிந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமிதஷா, ”நாட்டின் ஒரே மொழி ஹிந்தி தான்” என கூறியதையடுத்து, ஜக்கி வாசுதேவ் “இந்தியா முழுவதும் ஒரே மொழி இருக்க வாய்ப்பில்லை” என கூறியுள்ளார்.

ஹிந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டை அடையாளப்படுத்தும் மொழி ஹிந்தி தான் எனவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியை போலவே ஹிந்தியையும் பயில வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்த பல அரசியல் தலைவர்கள், பாஜக ஹிந்தியை நுழைக்க பார்க்கிறது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈஷா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ”மொழிகளின் அடிப்படையில் தான் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆதலால் ஒரே நாடு இருக்கலாமே தவிர ஒரே மொழி இருக்க முடியாது என கூறியுள்ளார்.  மேலும் தாய் மொழியோடு பிற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் எவ்வித தவறுமில்லை எனவும் கூறியுள்ளார்.