பேனர் கல்சர்: சினிமாகாரர்களுக்கு தடா போட்ட கடம்பூரார்!

Sugapriya Prakash| Last Updated: சனி, 14 செப்டம்பர் 2019 (13:07 IST)
திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து வேறு எங்காவது பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு, சேலம் அரசு அச்சகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியது பின்வருமாறு... 
 
தமிழகத்தில் உள்ள அரசு அச்சகங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் அரசுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் 100% அரசு அச்சகத்திலேயே அச்சடிக்கப்படுகிறது என பேசினார். 
இதன்பின்னர் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார். திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 
 
கடம்பூர் ராஜூவின் இந்த பேட்டு வரவேற்கும் வகையில் உள்ளது. ஏனெனில் பேனர் என்பது அரசியல்வாதிகள் மற்றும் சினிமாதுறையினர்களால் அதிகம் வைக்கப்படுகிறது. எனவே அவர்களும் பொருப்புடன் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :